பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புது வெள்ளம்

முருகனைப் போலக் கடலிடை நின்ற கடிமரம் தடிந்த வெற்றியை உடையவன் சேரன் என்பதைச் சொன்ன புலவர், அம் மன்னன், கடுஞ்சின விறல் வேள் களிற்றை ஊர்ந்தது போல யானையின் மேல் ஊர்வலம் வந்ததைப் பாடுகிருர்.

யானே உலா

சேரலாதன் யானையின்மேல் வருகிருன். அந்த யானைதான் எத்தனை அழகாக இருக்கிறது! அதற்கு அலங்காரம் செய்திருக்கிருர்கள். மலர் மாலையையும் மணியையும் புனைந்து அழகு செய்திருக்கின்றனர். அந்த மாலை மார்பளவும் வந்து தொங்குகிறது. வாடாமல் புதுமை மணத்தோடு விளங்கும் பைந்தார் அது. யானையின் நெற்றியிலே பட்டம் மின்னுகிறது. அதன் கொம்பு கிம்புரியுடன் விளங்குகிறது. பகை வருடைய மதில்களைத் தன் கொம்புகளால் மோதும் விறலையுடையது சேரலாதன் யானை. அதன் மருப் யிலே வெற்றிக்கதை எழுதியிருக்கிறது. அது வெற்றி யினுற் சிறந்த கொம்பு; வலன் உயர் மருப்பு. யானைக்கு இலக்கணம் உண்டு. ஏழடி உயரம் இருந்தால் நல்ல யானே. அதன் உறுப்புக்கள் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற வரையறை இருக்கிறது. யானே யின் இலக்கணத்தைச் சொல்லும் கஜ சாஸ்திரம் என்று ஒரு நூல் வடமொழியில் இருக்கிறது. முன்பு தமிழிலும் இந்தது. அதில் யானையின் உடலுக்குரிய குணத் தையும் குற்றத்தையும் விரிவாகக் காணலாம். படை யிலே சேர்த்துக் கொள்ளும் யானையையே ஆராய்ந்து, தகுதியுடையதா என்று தெரிந்து எடுப்பார்கள்.