பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புது வெள்ளம்

உடையது பாரத நாடு. "தென்குமரி வடபெருங்கல்” என்று இந்த நாட்டின் எல்லையைப் பிற புலவர்களும் சொல்வார்கள். இமய முதல் குமரி வரையில் பரந்த பாரத நாட்டில் வாழும் மனிதர்கள் உள்ளப் பண்பால் ஒத்த வர்கள். உடையும், உணவும், உரையும் வேறு வேருக இருந்தாலும் உள்ளப் பண்பு ஒன்றுதான். சால்பு, சான்ருண்மை, பண்பாடு (culture) என்று சொல்லும் இயல்பு பாரத நாடு முழுவதுக்கும் ஒன்றுதான். தமிழ் நாட்டு மன்னர்கள் பாரத நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளுவதையே தங்கள் லட்சியத்தின் முடிவாக எண்ணினர். அதற்கு அப்பால் சென்று நாடு பிடிக்கும் ஆசை அவர்களுக்கு இல்லை.

நெடுஞ்சேரலாதனும் பாரதநாடு முழுவதும் தன் ஆணையில் நிற்க விரும்பினன். முனிவர் வாழும் இமயம் முதல் தென்னங் குமரிவரையில் பரந்து கிடக் கும் பாரத நாட்டில் இடையிலே உள்ள மன்னர்களில் தன் ஆணைக்கு அடங்காமல் மிஞ்சி எதிர்த்தவர் களை யெல்லாம் அவன் அடக்கினன். அவர்களுடைய வீரம் முழுவதும் ஒழிய, எதிர் நின்று போரிட்டு வென்ருன். அதனல் அவன் வெற்றிப் புகழ் இமயத் தையும் குமரியையும் எல்லையாகக் கொண்டு நிரம்பியது. இந்தத் திக்விஜயத்தைப் புலவர் பாடிப் பாட்டை நிறைவு செய்தார். .

கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் * இதன் விரிவை இமயமும் குமரியும் என்ற கட்டுரையில் & store) of LC, -

&