பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 12

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் தென்னங் குமரியொடு ஆயிடை 25. மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.

0 முள்ளு முருங்கைமரம் நெருங்கிய ம&லப் பக்கத்தில் துயிலும் கவரிமான், பரவி விளங்கும் அருவியோடு நரந்தப் புல்லேக் கனவிலே காணும், முனிவர் நெருங்கி வாழ்வதும் பெரும் புகழை உடையதுமாகிய இமயம், தென்றிசையிலே யுள்ள அழகிய கன்னியாகுமரி,- அவற்றினிடையே உள்ள மன்னர்களில் தன் சொல்லுக்கு மேற்பட்டுக் கூறிய பகை மன்னர்களின் வீரம் கெடும்படி எதிர் கின்று போரிட்டு வென்று.

கடந்து, யானைமேல் கொண்டு பொலிந்த என்று முன்னே உள்ளவற்ருேடு இ8ணத்துப் பொருள் செய்ய வேண்டும்.

கவிர் - முள்ளு முருங்கை. இங்கே அந்த மரத்தின் இனமாகிய பலாச மரத்தைச் சொன்னதாகக் கொள்வது பொருத்தமாக இருக்கும். பலாசம் என்பது புரசமரம் என்று வழங்குகிறது. ததை - செறிந்த சிலம்பு - மலேப் பக்கம். கவரி - கவரிமான். நரந்தம்-நரங்தப் புல். இது கவரி மானுக்கு விருப்பமான உணவு. நரங்தை நறும்புல் மேய்ந்த கவரி" (132) என்று புறநானூற்றில் வருகிறது. கனவும் - கனவு காணும். ஆரியர் - முனிவர். துவன்றிய-நெருங்கி வாழும். இசை - புகழ். ஆயிடை அவற்றின் இடையிலே. மன் - மன்னர்களில். மீக்கூறுநர் - தன் சொல்லுக்கு மேலே மிடுக் குப்படப் பேசுவோர். மறம். வீரம். தப-கெடும்படி கடந்து - வஞ்சியாது எதிர் நின்று கொன்று. e

இமயமலையின் மேல் பல முனிவர்கள் ஆசிரமம் அமைத்துக்கொண்டு தவம் புரிந்து வருவதை வேறு

2 -