பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புது வெள்ளம்

புலவர்களும் சொல்லியிருக்கிருர்கள். அவர்களுடைய ஆசிரமங்களுக்கு அருகே பல வகை மான்கள் அச்ச மின்றித் துயிலும் காட்சியை அவர்கள் காட்டுகிருர்கள், கவிர்ததை சிலம்பில் துஞ்சும் என்றது, ஆண்டு உறையும் ஆரியர் ஆணையானே, முருக் கென்னும் முள்ளுடை மரமும் 'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா என்று சிறப்பிக்கப் பட்ட தன் மயிர்க்கும் வருத்தம் செய்யாமையால், அக் கவிர் செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக உறங்கும்' என்று எழுதுவர் பழைய உரையாசிரியர்.

yk குமட்டுர்க் கண்ணனர் பாட்டைத் தொடங்கும் போதே முருகனுடைய வீரச் செயலை நினைத்துப் பிறகே சேரன நினைக்கிருர். தாம் பாடிய பத்துப் பாட்டுக்குத் தனியே கடவுள் வணக்கம் பாடாவிட் டாலும், எடுத்தவுடன் ஆறு அடிகளால் ஆறுமுகப் பெருமானுடைய வீரச் சிறப்பைப் பாடினர்.

அப்பால் சேரலாதனுக்கு அப் பெருமானை ஒப் பாக்கி அவன் கடம்பறுத்ததையும், யானையின்மேல் உலா வந்ததையும், இமயமளவும் தன் வெற்றிச் சிறப் பைப் பரப்பியதையும் பாடினர். பாட்டு முழுவதும் வருமாறு: - -

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய வளிபாய்ந்து அட்ட் துளங்கு இருங் கமஞ்சூல் நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி : அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்

5. சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்