பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வம் கண்டோம் ! 31

போது நடு நடுவிலே நிறுத்தி மெட்டை மாற்ற வேண்டும். ஆசிரியப் பாவாகிய இதில் அப்படி மாற்ற வேண்டிய அவசியமே இன்றித் தொடர்ந்து படித்துக் கொண்டு செல்லும்படி அமைந்தமையால், இது ஒழுகு வண்ணம் ஆயிற்று. அற்று அற்றுச் செல்லாமல் ஒழுகிய ஓசையாற் செல்வது இது. (தொல்காப்பியம், செய்யுள் இயல், 226.) -

தூக்கு : பாட்டுக்குத் தாளம் உண்டு. தூக்கு என்றது தாளத்தை. ஆசிரியப்பாவில் வேறு அடிகள் விரவாமல் ஆசிரிய அடிகளே வந்தால் அதில் அமையும் தூக்கு, செந்துக்கு. இப் பாட்டு, செந்தூக்கைப் பெற்றது.

பெயர் : ஒவ்வொரு பாட்டிலும் சிறப்புடையதாகக் கருதிய ஒரு தொடரை அந்தப் பாட்டின் பெயராக அமைத்திருக்கிருர்கள். இந்தப் பாட்டின் எட்டாவது அடியில் வரும் 'புண் உமிழ் குருதி' என்ற தொடரையே இதன் பெயராக வைத்துள்ளார்கள். அதற்குரிய காரணத்தை, 'அருநிறந் திறந்த என முன்வந்த அடைச் சிறப்பானும், மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மலைக் கலவை போல எனப் பின்வந்த அடைச்சிறப்பானும் இதற்குப் புண்ணுமிழ் குருதி என்று பெயராயிற்று' என்று பழைய உரையாசிரியர் குறிப் பிடுகிருர்.

இந்தப் பாட்டைப் படிக்கும் போது, கழியில் குருதி வெள்ளம் சென்று கலந்து அதில் உள்ள நீரின் நிறத்தை மாற்றிச் செக்கச் செவேலென்று குங்குமக் குழம்பு கரைத்தாற்போன்ற தோற்றத்தோடு விளங்