பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,30 புது வெள்ளம்

பதிற்றுப்பத்தில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும்

உரிய துறை, வண்ணம், தூக்கு பெயர் என்பவற்றைத் தனியே பாட்டிற்குப் பின் குறித்திருக்கிறர்கள். இந்தப் பாட்டுக்கு உரியன வருமாறு :

துறை - செந்துறைப் பாடாண் பாட்டு.

வண்ணம் - ஒழுகு வண்ணம்.

தூக்கு - செந்துக்கு.

பெயர் - புண் உமிழ் குருதி.

துறை : இது புறப்பொருளைச் சொல்லும் பாட்டு; ஆதலின் புறப் பொருளுக்குரிய திணையும் துறையும் அமைந்தது. ஒருவரைப் புகழ்வதைப் பாடாண் திணை என்று புலவர் கூறுவர். இந்தப் பாட்டு, பாடாண் திணையைச் சார்ந்தது. அதில் செந்துறை யென்பது மக்களைப் பாடுவது. செந்துறையாவது விகார வகை யான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். (தொல்காப்பியம், புறத்திணை இயல், 27, நச்சினுர்க்கினியர் உரை.) சேரமானுடைய வெற்றிப் புகழை நடந்தபடியே பாடியமையால் இது செந்துறை யாயிற்று. -

வண்ணம் : எழுத்துக்களின் அமைதியாலும் சொற் களின் இணைப்பாலும் அமையும் ஓசை வகைக்கு வண்ணம் என்று பெயர். பிற் காலத்தில் சந்தம் என்று சொல்வார்கள். இசைப் பாடல்களில் மெட்டு என்று சொல்லும் உறுப்பைப் போன்றது இது. பல வகை உறுப்புக்களை யுடைய பாட்டுக்கள் சில உண்டு. கலிப்பா முதலியன அவை. அவற்றைச் சொல்லும்