பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

கடைச் சங்க நூல்களில் ஒன்ருகிய பதிற்றுப் புத்து நூறு செய்யுட்களே உடையது. நூறு பாடல்களும் சேர மன்னர்களின் சிறப்பை விரித்து உரைப்பவை. ஒவ்வொரு சேர மன்னன் மேலும் பத்துப் பத்தாகப் பத்துச் சேர மன்னரைப் பற்றிப் பாடியமையால் பதிற்றுப் பத்து என்று பெயர் வந்தது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி யிருக்கிருர். இப்போது இந்த நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லே. மற்றத் தொகை நூல் களுக்கு அமைந்ததுபோல இதற்கும் தனியே கடவுள் வாழ்த்து ஒன்று இருந்திருக்க வேண்டும். அதுவும் இப் போது கிடைக்கவில்லே.

இப்போதுள்ள பாடல்களில் இரண்டாம் பத்தை இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனப் பாராட்டிக் குமட்டுர்க் கண்ணணுர் பாடி யிருக்கிருர், மூன்ரும் பத்தில் பல்யானேச் செல்கெழுகுட்டுவனேப் பாலேக் கெளதமனர் பாடியுள்ளார். நான்காம் பத்து, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் புகழை வைத்துக் காப்பியாற்றுக் காப்பியனர் பாடியது. ஐந்தாம் பத்து, கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவனேப் பரணர் பாடியது. ஆரும் பத்து, ஆடு கோட்பாட்டுச் சேரலா த&னக் காக்கை பாடினியார் நச்செள்ளேயார் பாடிய பாடல்கள் அடங்கியது. ஏழாம் பத்து, செல்வக் கடுங்கோ வாழியாதனேக் கபிலர் பாடியது. எட்டாம் பத்து, பெருஞ் சேரலிரும்பொறையின் புகழை வைத்து அரிசில் கிழார் பாடிய பத்துப் பாடல்களாலாகியது. ஒன்பதாம் பத்து, குடக்கோ இளஞ் சேரவிரும் பொறையைப் பெருங்குன்றுரர் கிழார் பாடியது.

இந்த நூலே யார் தொகுத்தார், யார் தொகுக்கச் செய்தார் என்ற செய்தி கிடைக்கவில்லே. இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது சற்று விரிவான குறிப்புரையாக இருக்கிறது.