பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு து .ெ வ ள் ள ம்

இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்குப் பின் அவனுடைய தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பவன் சேரநாட்டில் செங்கோல் ஒச்சி வந்தான். அவன் போர் பல செய்து வென்ருலும் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற விருப்பம் உடை யவன். அரசச் செல்வத்தால் பிறருக்கு நன்மை உண்டாகும்படி செய்பவன். உலகம் நிலையாதது என்றும் இறைவனுடைய அருளைப் பெறுவதே மக்கட் பிறப்பின் பயன் என்றும் உணர்ந்தவன்.

அவன் காலத்தில் நாட்டில் அமைதி பரவியது. புலவர்கள் அவனைப் பாடிப் பாராட்டினர். கெளதமனர் என்ற புலவர் அவனைப் பத்துப் பாடல்களால் புகழ்ந்தார். பதிற்றுப் பத்தில் மூன்ரும் பத்தாக அவை அமைந்துள்ளன. கெளதமனர் அகப் பொருளில் பாலைத் திணையைப் பாடுவதில் வல்லவர். அதனுல் பாலைக் கெளதமனர் என்று அவரைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.

போர் வீரர்களுக்கு எப்போதும் போர் இருந்து கொண்டே இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். போர் என்ற சொல்லைக் கேட்டாலே அவர்களுடைய தோள் பூரிக்கும். அவர்களுக்கெல்லாம் நாட்டை ஆளும் ஆட்சியிலே பொறுப்பான வேலைகளைக் கொடுத்து, போரில் வெளியாகும் அவர்களுடைய ஆற்றலை நாட் டைக் காக்கும் திறத்தில் பயன்படச் செய்தான். பகை