பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புது வெள்ளம்

வரை அழிக்கும் செயலில் முன்நிற்கும் அவர்களே நாட்டின் வளப்பத்தை மிகுதியாக்கும் செயலில் ஈடுபடுத் தின்ை. எங்கும் திருமகள் விலாசம் நிறைந்திருந்தது. பேராறு என்ற ஆற்றில் நீர்வளம் மலிந்திருந்தது. இவற்றை யெல்லாம் கெளதமனர் பாடுகிறர்.

சேர நாடு விரிந்தது. அது செல்வம் நிரம்பி விளங்குகிறது. அதற்குக் காரணம் சேர மன்ன னுடைய அரசாட்சி. அவனுடைய படையில் பல வீரர்கள் இருந்தார்கள். போரில் பகை மன்னரை வெல்லும் ஆற்றலுடையவர்கள் அவர்கள்; பெரிய வெற்றியை உடையவர்களாக இருந்த மன்னர்கள் முன்பெல்லாம் சேரனுக்குப் பகைவராக வந்து எதிர்த் தார்களானுல் அவர்களைப் புறங்காணும் திறலினர். படையில் சிறப்பான பகுதி யானைப்படை. பகைவ ருடைய படையில் பசிய கண்ணையுடைய யானைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றின் வரிசையை, ஒரே கூட்டமாக நிற்கும் அணியை, வேலாற் பொருது அழிக்கும் பெருந்திறலை உடையவர்கள் சேரனுடைய மறவர்கள்; தம்முடைய வலிமையை யெல்லாம் செலுத்தி வேலை எறிந்து வெற்றி கொள்பவர்கள். யானையை எறிந்து கொல்லும் வீரமே சிறந்த வீரம். 'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என்று ஒரு தாய் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. இந்த மறவர், பெருவிறலையுடைய பகைவரது பைங்கண் யானை ஒன்றி நிற்கும் நிரை (வரிசை) அழியும்படியாகத் தம் உரத்தைப் புலப்படுத்தி வேலால் எறியும் வீரம்