பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வெள்ளம் 35

உடையவர். அப்படி யானையை வேலால் எறியவே, யானை மேலிருந்து பெருகும் இரத்தம், அவர் காலிலே பட்டுக் கறையாக நிற்கும். இரத்தக் கறையையுடைய அடிக்கு மேலே காலில் வீரக்கழலை அணிந்திருக்கி ருர்கள். அவர்கள் மிக்க கடுமையானவர்கள்; பெரிய வீரர்கள்; கடுமா மறவர். அவர்களுடைய தோள்வலியை அளவிட முடியுமா? அம்புகளைத் தொடுத்து விட்டால் அவை மிக்க வேகமாகச் சென்று குறியைத் தாக்கும்.

இப்போது அந்த வீரர்கள் வில்லையும் அம்பையும் * தொடுவதில்லை. வேகமாகச் செல்லும்படி அம்பு தொடுத்தலை அடியோடு மறந்து விட்டார்கள். போர் இருந்தால்தானே அம்பு தொடுக்க வேண்டும்? சேர மன்னனுடைய செங்கோல் ஆட்சியில் போரே இல்லை. அந்த மறவர்கள் முன்பு வெளிப்படுத்திய வீரம் மற்ற மன்னர்களுடைய நினைவில் இருப்பதல்ை அவர்கள் சேர அரசனேடு போர் செய்ய இப்போதும் அஞ்சி ஞர்கள். மறவர் வில் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், அவர்கள் சேர நாட்டில் இருக்கிருர்கள் என்ற நினைவு ஒன்றே பகைவர்களுக்கு அச்சத்தைத் தந்தது. அவர் களும் போர் செய்தலை மறந்து, சேரனுக்குத் திறை யளக்கும் மன்னர்களாகி வாழ்ந்தனர்.

போர் இல்லாதது மாத்திரமா? மறவர்களைப் போருக்கு மாத்திரம் பயன் படுத்திக்கொண்டு மற்றக் காலங்களில் அவர்களுடைய தோள் தினவு எடுக்கும்படி சும்மா இருக்கச் செய்வதனால் பயன் இல்லை என்று எண்ணின்ை சேரன். அவர்களுக்கு வேறு வேலை