பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புது வெள்ளம்

கொடுத்தான். போர் இல்லாமையாலும் வேறு செயல் களில் ஈடுபட்டதனுலும் அவர்கள் அம்பு தொடுத்தலை மறந்து போனர்கள். அப்படிச் சேரமான் கொடுத்த வேலை என்ன? சேர அரசு முழுவதையும் காக்கும் உரிமையும் கடமையும் கொண்ட சேரமான் அந்தக் கடுமா மறவருக்கும் நாடு காவலாகிய தொழிலை அளித் தான். அங்கங்கே மறவர் தலைவரை அதிகாரியாக நிறுவி நாட்டைக் காக்கச் செய்தான். அவர்கள் பெரு மிதத்தோடு அந்த வேலையைச் செய்து வந்தார்கள். அந்த வேலை அவர்களுக்கு உகந்ததாக இருந்தது. இல்லையாளுல் அவர்கள் கடமைக்காக வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் உள்ளத்துக்குள் எப்போதும் வில் லும் அம்புமே குடிகொண்டிருக்கும். இப்பொழுதோ அவர்கள் மேற்கொண்ட வேலை அவர்களுக்கே மகிழ்ச்சியை அளித்ததல்ை அவர்கள் அம்பை விடு வதையே மறந்துபோளுர்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட நாடுகளில் யாதொரு குறையும் வராமல் காவல் புரிந்து வந்தார்கள். உடம் பின் ஒவ்வோருறுப்பும் வளம் பெற்ருல் உடம்பு முழு வதும் வளம் பெறுவது போல, நாட்டின் பகுதிகளைக் கடுமா மறவர் காவல் செய்ததனுல் நாடு முழுவதும் வளப்பமான வாழ்வைப் பெற்றது. -

சேரமானும் நாட்டின் நன்மைக்கு உரியவற்றை ஆராய்ந்து செய்து வந்தான். மனிதர்களுடைய நல் வாழ்வுக்கு இன்றியமையாதது உணவு. சேரனுடைய ஆட்சியில் வயல்கள் நன்ருக விளைந்தன. விளைவு முட்டுறவே இல்லை. சேர நாடு மக்கள் இன்ப வாழ்வு