பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வெள்ளம் 2?

நடத்தும் இடம்; துன்பம் என்பதே இல்லாத உறையுள்' என்ற புகழ் எங்கும் பரவியது. பகையாலும் பசியாலும் பிணியாலும் துன்பம் அடையாமல் மக்கள் மேன் மேலும் வளம் பெற்று வாழ்ந்தார்கள். அவ்வாறு சேரமான் நாடுகாவலாகிய தன் தொழிலை ஆற்றினன்.

பகைவர் செய்யும் கொடுமை அந்த நாட்டில் இல்லை. அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி அலறும் ஒலக் குரல் இல்லை. வெம்மையால் விளைந்த ஆரவாரம் இல்லை. ஆனல் வேறு ஒரு வகையான பூசல் (ஆர வாரம்) உண்டு. இந்த ஆரவாரம், பகைவர் வந்தால் அவரைக் கண்டு செய்யும் முழக்கத்தைப் போல ஒரு கால் தோற்றலாம். ஆணுல் அந்த முழக்கம் அச்சத். தால் எழுவது; இந்த ஆரவாரம் மகிழ்ச்சியால் எழுவது.

சேர நாட்டுக்கு வளப்பம் தரும் ஆறுகளில் பேராறு தலைமையானது. அந்த நாட்டில் உள்ள ஆறு களில் அதுவே பெரிதாதலின் அதற்குப் பேராறு என்ற பெயர் வந்தது. அது எப்போதும் நீர் அருமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, ஜீவ நதி. கதிரவன் வெப்பம் அதிகமாகிக் கோடை நீண்டால் மலைகளின் வளப்பம் குறையும்; பசுமை குறையும். பச்சைப் பசே லென்று இருந்த அழகிய தோற்றம் மாறிப் பொலி வழிந்து வெறிச்சென்று இருக்கும்; புல்லென்றிருக்கும். நல்ல காலத்தில் அருவிகள் தத்திக் குதித்து நிலப் பரப்பை அடைந்து ஒடும். ஆனல் கோடை நீடிய காலத்தில் அவை வற்றிப் போய்விடும். மலைகளில் அருவிகளே இரா. அப்படி ஒரு பஞ்சகாலம் வந்தாலும்