பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புது வெள்ளம்

சேர நாட்டுக்குக் கவலை இல்லை. வறட்சி மிக்க அந்தக் காலத்திலும் பேராறு வற்ருமல் வளம் பெருக்கும். அதுவும் மலையிலிருந்து வருவதுதான். புனல் மிகுதி யாகப் பெற்றுத் தரையிலே இறங்கியவுடன் அதைக் கரையிட்டு அனைத்து நாட்டினர் பயன்படுத்திக் கொள்ளுகிருர்கள். கரைகளினூடே இறங்கி ஓடும் பேராறு அகன்ற இடத்தை உடையது. தரையில் வந்தவுடன், உரிய பருவம் வந்தவுடன் விளையாட்டை யெல்லாம் விட்டு விட்டு இல்லறம் செய்யப் புகும் மங்கை போல, மலையிலே துள்ளிக் குதித்து வந்த ஆறு கரைக்குள் அடங்கி நாட்டிற்கு வளம் உண்டாக்கு கிறது. மண் வளத்தால் சிறப்புப் பெற்ற அகன்ற வயல்களிலே பாய்கிறது. அப்படிப் பாய்வதனுல் இயல் பாகவே நில வளம் பெற்ற அவ் வயல்கள் நீர் வளமும் பெற்று மேலும் மேலும் நல்ல விளைச்சலை உதவு கின்றன. விளைவின்றி வெடித்துக் கிடந்த கரம்பை நில மெல்லாம் வளம் பெறுகின்றன. வெடித்த

பிளப்புகளில் நீர் பாய்ந்து நிறைகிறது.

பேராற்றில் புதிய வெள்ளம் வருகிறது. சீருடிைய வியன் புலங்களிலே பாய்ந்து அவற்றின் வளப்பத்தை மிகுதியாக்கும் பொருட்டு வருகிறது. போர் செய்யப் புகுவார் தழைகளைச் சூடி வேகமாக ஆரவாரத்தோடு கண் சிவப்பேற வருவது போலப் புது வெள்ளம் வருகிறது. தழைகளும் பூங் கொத்துக்களும் அதன் மேல் மிதக்கின்றன. புது வெள்ள நீர் செங்கலங்கலாக இருக்கும் அல்லவா? அது கண் சிவந்த படை வீரரை நினைப்பூட்டுகிறது. அது வரும்போது ஓசை உண்டா