பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வெள்ளம் 39.

கிறது. அதைக் கண்ட உழவரும் புது நீரில் விளையாட எண்ணிய மக்களும் பறை கொட்டியும் வாயால் கூவியும் ஆரவாரம் செய்கிருர்கள். எல்லாம் சேர்ந்து பெரிய பூசலாகக் கேட்கின்றன. அந்தப் பூசலல் லாமல் வேறு பூசலை அகன்ற இடத்தையுடைய சேர நாட்டிலே காண முடியாது.

சேரனப் பார்த்து, "நீ அரசு காவல் தொழிலைத் தக்கபடி செய்வதனுலே, உன் நாட்டில் பேராற்றுப் புது வெள்ளத்தின் பூசல் அல்லாமல் வேறு பூசல் இல்லை; கொடுமை இல்லை. நின் நாடு செல்வச் சிறப்பை உடையது' என்று பாடுகிருர் பாலைக் கெளதமனர்.

திருஉடைத் தம்ம! பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரம் துரந்து எறிந்த கறைஅடிக் கழற்காற் கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப 5. இளைஇனிது தந்து, விளைவுமுட் டுருது

புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின், விடுநிலக் கரம்பை விடர்அளே நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி அற்ற பெருவறற் காலேயும் 10. நிவந்துகரை இழிதரும் நனந்தலைப் பேரியாற்றுச்

சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர் உவலே சூடி உருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை அரிதுநின் அகன்றலே நாடே. ைசெல்வச் சிறப்பை உடையது : முன்பு பெரிய வெற்றியை உடைய பகைவர்களின் பசிய கண்ணேயுடைய