பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புது வெள்ளம்

யானைகளது கூடிய அணிவகுப்பு அழிந்து ஒழியும்படியாகத் தம்முடைய வலிமையைச் செலுத்தி வேலால் எறிந்து, இரத்தக் கறையை உடைய அடிகளேயும் வீரக் கழலே அணிந்த காலேயும் உடைய, கோபம் மிக்க பெரிய விரர்கள், வேகமாக அம்பு தொடுப்பதை மறந்துவிடும்படி அவர்களுக்கு நாடு காவலே இனிதாக வழங்கி, வயல்களில் நெல் முதலிய வற்றின் விளைவு தடைப்படாமல், வருத்தமில்லாத மக்கள் வாழும் இடங்களில் நீ காவல் தொழிலேச் செய்வதனல், கோடைக்காலம் நீடித்து நிற்க அதனால் குன்றுகள் பொலி வழிய அருவிகள் இல்லையான பெரிய பஞ்ச காலத்திலும், நீர் மிக்குக் கரையினிடையே வந்து இறங்கும் பரந்த இடத்தை யுடைய ப்ேராற்றில், விளேவின்றி விடப்பட்ட கரம்பை நிலங் களில் வெடிப்பும் பள்ளமும் நிறைய மண் வளத்தால் சிறப்புடைய அகன்ற வயல்களினிடத்தே பாய்ங்து அவற்றின் விளைவை மிகுதிப்படுத்தும் பொருட்டுத் தழைகளை மேலிட்டுக் கொண்டு தோற்றத்தை உடையதாகி வரும் வெள்ளத்தின் செந்நிறம் பெற்ற நீரின் ஆரவாரத்தையன்றி, பகைவரால் உண்டாகும் கொடுமை இல்லாதது, கின் அகன்ற இடத்தையுடைய நாடு.

"நீ தொழில் ஆற்றலின், கின் அகன்றலே நாடு வெம்மை அரிது; திருவுடைத்தம்ம!’ என்று முடிவு செய்யவேண்டும்.

திரு - வளப்பம், செல்வம், திருமகள் விலாசம். அம்ம : வியப்பைக் குறிக்கும் இடைச் சொல். விறல்-வெற்றி. பைங் கண் - பசுமையான கண்; இங்கே பசுமை சிறுமையைக் குறித்தது; சிறிய குழந்தையைப் பச்சைக் குழந்தை என்று சொல்வது போன்றது. புணர்தல்-கூடுதல். நிரை - வரிசை. துமிய - வெட்டுண்டு அழிய. உரம் துரந்து-தம் முழு வலிமை யையும் செலுத்தி, கறை-இரத்தக் கறை. மறவர் - வீரம். கதழ் - விரையும். தொடை - தொடுத்தல்; இங்கே அம்பைத்