பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வெள்ளம் 31

தொடுத்தல். இளே - காவல். முட்டு - தடை. புலம்பா - புலம் புதல் இல்லாத வருந்தாத, உறையுள் - மக்கள் இருப்பிடம். தொழிலென்றது இங்கே நாடு காவல் தொழிலை.

விடுகிலம் - பயிர் செய்யாமல் விட்ட நிலம். கரம்பை - தரிசு கிலம். விடர் - பிளப்பு. அளே-பொந்துகள். புல்லென - பொலிவழிய. வறன் - வறட்சி; வறற்காலே - மழையற்ற பஞ்ச காலம். நிவந்து - நீர் உயர்ந்து. இழிதரும் . இறங்கி வரும். நனந்தலே-அகன்ற இடத்தையுடைய. வியன்புலம் - அகன்ற வயல். வாய் - இடத்தில். மிகீஇயர் - மிகுதியாகச் செய்யும் பொருட்டு; மிகுதியென்றது விளைவு மிகுதியை. அளே நிறைய, வாய் பரந்து மிகீஇயர் என்று கூட்ட வேண்டும். t

உவலே - தழை. உருத்து - தோற்றத்தைப் பெற்று; கோபித்து என்று மற்ருெரு பொருள் தோற்றியது. மலிர் நிறை - வெள்ளம். பேர்யாற்றில் மிகீஇயர் வரும் மலிர்கிறை என்று கூட்டுக. பூசல் - ஆரவாரம். வெம்மை - கொடுமை.

அகன்றலே - அகன்ற இடத்தை உடைய. 0

இதற்குரிய துறை முதலியன வருமாறு :

துறை - நாடு வாழ்த்து. வண்ணம் - ஒழுகு வண்ணம். துக்கு செந்தூக்கு. பெயர் - உருத்துவரு மலிர்நிறை. சேரமானுடைய நாடு வெம்மை அரிதென்றும், திருவுடைத் தென்றும் கூறியமையால் இது நாடு வாழ்த்தாயிற்று. ஒழுகு வண்ணம், செந்தூக்கு என்ப வற்றின் இயல்பை முந்திய பாடலின் விளக்கத்திலே

காணலாம்.