பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புது வெள்ளம்

இயல்பான பெயர் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற சிறப்புப் பெயரே நமக்குத் தெரியவருகிறது.

காப்பியாற்றுக் காப்பியளுர் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் புகழ்ந்து பத்துப் பாட்டுக்களைப் பாடினர். அந்தப் பத்துப் பாட்டும் அந்தாதியாக

அமைந்திருக்கின்றன. ஒரு பாட்டின் முடிவில் உள்ள

|

தொடரையோ சொல்லையோ அடுத்த பாட்டின் தொடக்கமாக அமைத்துப் புலவர் பாடியிருக்கிருர், ! இந்தப் புத்துப் பாட்டுக்களும் பதிற்றுப்பத்தின் நான்காவது ப்த்தாக இருக்கின்றன. அந்தப் பத்தில்

உள்ள ஏழாவது பாட்டைச் சற்றுப் பார்ப்போம்.

சேரன் பகைவர்களை வென்று அவர்களுடைய

நாட்டுச் செல்வத்தைக் கவர்ந்து வந்தான். தன்னு

டைய வீரத்தைப் புலப்படுத்துவது ஒன்றுதான் அவன் விரும்பிய பயன். ஆதலின் அந்த நாடுகளிலே

கிடைத்த செல்வத்தை அவன் தனக்கு என்று வைத் துக் கொள்ளவில்லை. அவற்றைப் புலவருக்கும் பாண ருக்கும் கூத்தருக்கும் வழங்கின்ை. போரிலே வெற்றி உண்டாவதற்குத் துணையாக நின்ற படை வீரர்களுக்கு வழங்கினன். ஆதலின் அவன் போர் செய்ததனுல் துன்பம் அடைந்தவர்கள் பகைவர்கள் மட்டுமே.

மற்ற யாவரும் இன்பம் அடைந்தார்கள்.

அவன் தன் செல்வத்தைப் பிறருக்குப் பயன் படுத்துவதையே விரும்புகிறவன். அவனுடைய வீர