பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி

காப்பியாறு என்ற ஊரிலே பிறந்தவர் காப்பியனுர் என்ற புலவர்; வஞ்சிமா நகரத்தில் அரசு செலுத்திய சேர மன்னனைக் கண்டு அவன் வெற்றிச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குணச் சிறப்பையும் அறிந்தார்.

அந்தச் சேர அரசன் முடிசூடியது இயற்கையான முறையில் அன்று. பகைவர் அறியாதபடி முடிசூட்டிக் கொண்டான் போலும் அதனுல் வழிவழி வந்த சேர மன்னருடைய முடி அவனுடைய முடிசூட்டுக் காலத் தில் கிடைக்கவில்லை. தலையில் அணியும் கண்ணியும் கிடைக்கவில்லை. ஆளுல் உரிய காலத்தில் முடிசூட வேண்டும் என்ற தீர்மானத்தால் நாரால் ஒரு முடி செய்யச் செய்து அணிந்தான். களங்காயினுல் சிறிய மாலை கோக்கச் செய்து அதையே கண்ணியாக அணிந்தான். முடிசூடிய பின் தன் வீரப் பெருமை யாலே பகைவர்களை அழித்து யாவரும் போற்றும் வண்ணம் வஞ்சிமா நகரில் இருந்து ஆட்சி புரிந்தான்.

மிக்க துணிவோடு குறித்த காலத்தில், நாரால் செய்த முடியையும் களங்காய்க் கண்ணியையும் அணிந்து செங்கோல் ஏற்றமையில்ை, அவனை யாவரும் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்று வழங்கலாயினர். அவனுடைய இயற் பெயரைச் சொல்பவர்களே இல்லாமற் போயினர். புலவர்களும் இயற் பெயரை மறந்து சிறப்புப் பெயரையே பாவில் அமைத்துப் புகழ்ந்தனர். இன்று அம் மன்னனுடைய

3