பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துறைப் பரதவன்

செங்குட்டுவன்

சேரர் குலத்தோன்றல்களில் செங்குட்டுவன் தனிச் சிறப்புடையவன். வடநாட்டுக்குச் சென்று தன்னை எதிர்த்த மன்னர்களை வென்று இமயத்தி லிருந்து கல் கொணர்ந்து பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் திருவுருவத்தை அதில் அமைக்கச் செய்து கோயிலெடுத்துப் புகழ் பெற்றவன். நல்லிசைப் புலவர்களுடைய பாராட்டைப் பெற்றவன். சிலப்பதி காரத்தில் உள்ள வஞ்சிக் காண்டம் முழுவதும் அவனு டைய பெருமையை விரிவாகச் சொல்கிறது.

மேல் கடலின் நடுவே சில தீவுகளில் சிற்றரசர் சிலர் ஆட்சி புரிந்து வந்தார்கள். அடிக்கடி அவர் களால் சேர நாட்டினருக்குத் துன்பம் உண்டாயிற்று. அவர்களுடைய குறும்பை அடக்கித் தன் ஆணைக்குள் வைக்க வேண்டுமென்று செங்குட்டுவன் எண்ணினன். கடலிடையே இருந்த தீவுகளாதலின் அந்தக் கடலையே இயற்கையான அரணுகக் கொண்டு அச்சமின்றி வாழ்ந் தார்கள் அவர்கள். கடலைத் தாண்டிப் படையுடன் வந்து தம்மை எதிர்ப்பவர் யார் என்ற தைரியம் அவர் களுக்கு. அதனுல் அடுத்தடுத்துத் தங்கள் குறும்புத் தனத்தைக் காட்டி வந்தனர்.

செங்குட்டுவன் கடலிடையே வாழ்ந்த அவர்கள் மிடுக்கை ஒடுக்க உறுதி பூண்டான். பல படைவீரர்கள்