பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி 48

கிலேச் சிறப்பு - பழமையான காலமுதல் கிலேயாக இருத்த லாகிய சிறப்பையுடைய 'பதியெழு அறியாப் பழங்குடி' என்று பிறரும் கூறுவர். நிழல் - ஆட்சி; குடை நிழல் என்று கூறுவது மரபு. வாழ்நர் - வாழ்பவர். கோடு - கொடுமை. கோடா - மாறுபடாத கொள்கை - இலட்சியம். நன்று பெரிதும் - மிக அதிகமாக, வெந்திறல் - வெம்மையை யுடைய ஆற்றல்; பகைவருக்கு வெம்மையாக இருத்தலின் வெந்திறல் என்ருர் 9

இதனுற் சொல்லியது, அவற்குள்ள குணங்களை யெல்லாம் எடுத்துப் புகழ்ந்து அவன் செல்வத்தையும் அவனையும் வாழ்த்தியவாருயிற்று' என்பர் பழைய உரையாசிரியர். இதன் துறை முதலியன வருமாறு:- துறை - செந்துறைப் பாடாண் பாட்டு,

வண்ணம் ஒழுகு வண்ணம். துக்கு - செந்துக்கு. பெயர் - வலம்படு வென்றி. தன் நாட்டுக் குடிமக்களுக்கு நடுக்கத்தை உண் டாக்கிய வறுமை முதலியவற்றைப் பகையாக வைத்து அவற்றை நீக்கிய செயலை முதல் வெற்றியாகக் கூறி, அது பின்வரும் வெற்றிமேல் வெற்றிக்கெல்லாம் அடிப் படை என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வலம்படு: வென்றி என்று சிறப்பித்தார் புலவர். இத் தொடர் ஆழ்ந்த கருத்தை உடையதாக இருத்தலால் இதுவே. இப் பாட்டுக்குப் பெயராயிற்று.