பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 * புது வெள்ளம்

கொடுத்தான்; யானை கொடுத்தான். அவற்ருேடு நில்லாமல் பாணருக்குப் பைம்பொன்னுல் ஆன தாமரை யைச் சூட்டின்ை.

ஆடலில் வல்ல விறலியர்க்கு முத்து மாலையைப் பரிசளித்தான். செங்குட்டுவன் அவைக் களத்தில் ஆடுவதென்ருலே அவர்களுக்கு அளவற்ற ஆர்வம். கலையின் நுட்பங்களை உணர்ந்து சுவைக்கிறவர்களைக் கண்டால் கலைஞர்களுக்கு ஊக்கம் உண்டாவது இயல்பு. செங்குட்டுவனுடைய திருவோலக்கத்தில் விறலியர் மிக நன்ருக ஆடினர்கள். அப்போது அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பியது. அது முகத்தில் மலர்ச்சியைத் தந்தது. நெற்றியைப் பார்த்தாலே அந்த விளக்கம் தெரிந்தது. இயல்பாகவே விளக் கத்தையுடைய நுதல் பின்னும் பொலிவு பெற்று விளங் கியது; ஒண்ணுதலாக இருந்தது. அங்கே ஆடிய ஒண்ணுதல் விறலியருக்கு அரசன் ஆரம் பூட்டினுன். அவன் கடல் பிறக்கு ஒட்டியவனுதலால், கடலிலே உண்டாகும் முத்து அவனுக்கு அருமை அல்லவே! விறலியர் எத்தனை பேர் வந்தாலும் ஆரம் வழங்கும் செல்வம் அவனிடம் உண்டு.

கலைஞர்களைப் புரக்கும் வள்ளலினுடைய புகழ் மேலும் மேலும் வளரும், பல இடங்களில் பரவும்; என்றும் கெடாமல் நிலவும். ஆதலின் சேரன் செங் குட்டுவனுக்கு அமைந்த புகழ் கெடலரும் புகழ். கலை நுகர் திறம், ஈகை, வீரம், ஆட்சிமுறை முதலிய பல திறத்திலும் அவன் புகழைப் பெற்றன். ஆதலின் அவன் பெற்றது ஒரு புகழ் அன்று; பல புகழ்; அதுவும்