பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 49

கெடலரும் பல்புகழ். அந்தப் புகழ் என்றும் நிலை நிற் கும்படி மேலும் மேலும் புகழுக்குரிய செயல்களைச் சேரமான் செய்துகொண்டே வந்தான். இவற்றைப் பரணர் கண்டும் கேட்டும் உணர்ந்தார்.

கடல் வெற்றி சேரமான் கடல்பிறக் கோட்டிய வெற்றியைச் சிலர் புலவரிடம் எடுத்துக் கூறினர்.

“எத்தனையோ காலமாக அந்தச் சிற்றரசர்கள் குறும்பு பண்ணிக்கொண்டே இருந்தார்கள். கடலுக் குள்ளே சென்று அவர்களை அடக்க யாரும் துணிய வில்லை' என்ருர் ஒரு பெரியவர்.

'அப்படியா அந்த அரசர்களுக்குப் படைப் பலம் மிகுதியோ?" என்று கேட்டார் பரணர்.

"அவர்களுக்கு வேறு பலம் ஒன்றும் இல்லை. கடல்தான் பலமாக இருந்தது; படையாக இருந்தது; அரணுக இருந்தது. நம் மன்னன் நீரிலே புகுந்தான். கடலொடு போராடினுன்; வென்ருன்.'

"அப்படியானுல் நம் மன்னர்பிரானைப் பரதவன் என்று சொல்லலாம் போலிருக்கிறதே!" என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார் பரணர். .

'என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? மீன் பிடிக்கும் பரதவரைப் போன்றவன் என்று சொல்வது மன்னர் பிரானுக்கு இழுக்காவது இருக்கட்டும்; சொல்பவர் களுக்கே இழுக்கல்லவோ?’’

"சொல்வதில் என்ன தவறு? மற்றவர்களெல்லாம்

கடலின் ஆழத்தையும் பரப்பையும் கண்டு அஞ்சி

4 سس به لمس په