பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 51

வணங்கிய சாயல்

மற்ருெரு நாள்.

சேர மன்னனைத் தேடிக்கொண்டு நல்ல கட்டிளங் காளையர் பலர் வந்திருக்கிருர்கள். எல்லோரும் தங்கள் தங்கள் தொழிலிலே சிறந்து நிற்பவர்கள்; பாணர்கள் பாடியதைக் கேட்டு அவர்களுக்குப் பல பரிசில்களைச் செங்குட்டுவன் தந்ததைப் பார்த்தவர்கள். அந்த இளையர் ஒரே கூட்டமாக, "நாமும் நமக்குத் தெரிந்த பாட்டைப் பாடிப் பரிசில் பெறுவோம்' என்று எண்ணி வந்திருக்கிருர்கள். அவர்கள் சேரமானுடைய புகழை அமைத்துப் பாட்டுப் பாடுகிறர்கள். பாணர்கள் பாடிய பாடல் எங்கே? இந்தப் பாட்டு எங்கே? வேறு இடமாக இருந்தால் அவர்களைப் பாட விடுவார்களா? அவர்கள் பாடும் பாடல்களைக் கொள்வார்களா? அவை கொள்ளப் பாட்ல். இங்கே சேரமான் அந்தப் பாடல் களைக் கேட்கிருன். பிற இடங்களில் கொள்ளாப்

பாடல் இங்கே எள்ளாப் பாடலாக இருக்கிறது.

அந்த இளையர், கூட்டமாக வந்து பாடிக் கையை நீட்டுகிருர்கள்; வரிசையாக நின்று நீட்டுகிருர்கள். எல்லாம் வன்மை பெற்ற கைகள்; ஒரே மாதிரி உள்ள

கைகள்; ஒன்றுக்கு ஒன்று நேர் ஆன கைகள்.

அவர்களைப் பார்த்து மகிழ்கிருன் செங்குட்டுவன். ‘நம்மிடத்தில் இவர்களுக்கு எத்தனை அன்பு!" என்று உவகை பூக்கிருன். அவர்களுக்கும் பரிசில் வழங்கு கிருன். பகைவருக்குமுன் வணங்காத பேராண் மையை உடையவன், சிறந்த கலைஞர்களின்