பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புது வெள்ளம் -m

அற்புதமான பாடலைக் கேட்டு அவற்றின் சிறப்பை உணர்ந்து பாராட்டுகிறவன், இப்போது எளியவனுக, மென்மையை உடையவனுக இருக்கிருன் இளையர் விருப்பத்தை அறிந்து அவர் பாடலை நன் றென்று கேட்கிருன். அவர்களுக்கு வளைந்து கொடுக்கிருன். இந்த வணங்கும் சாயல் - எளிய வகை வளைந்து கொடுக்கும் மென்மை-புலவர்களுக்கு வியப்பைக் கொடுக்கிறது. நேற்றுத்தானே பாணர் களின் உயர்தரமான இசையிலே இன் புற்றுப் பரிசு கொடுத்தான்? இன்று இந்தக் கொள்ளப் பாடலுக்குக் கொடுக்கிருனே!' என்று வியக்கிருர்கள்.

'கடல்பிறக் கோட்டிப் பெற்ற பண்டங்களை யெல்லாம் இப்போது இந்த இளையருக்கு வாரி வாரி வீசுகிருன். ஆண்டு நீரிலே பெற்ற தாரத்தை (பண்டத்தை), ஈண்டு இவர் கொள்ளப் பாட்ற்கு எளிதினின் ஈகின்றன். அந்தப் பண்டங்களைப் பெறுவது எவ்வளவு அரிது! மற்ற அரசர்களால் நினைக்கவும் முடியுமா? செங் குட்டுவன் ஒருவனுல்தான் அது முடிந்தது. அவ்வாறு பெறற்கரிய பண்டங்களை இவர்களுடைய சாமானிய மான பாடலுக்கு எளிதிலே வீசுகிருனே!" என்று சிலர் எண்ணிஞர்கள்.

'உங்கள் பாட்டுத் தரம் போதாது என்று சொல்ல

இவனுக்கு வாய் இல்லையோ?”

"அரிதிற் பெற்ற பண்டங்களைக் கொடுக்க மாட்டேன் என்ற வார்த்தைகள் இவன் வாயிலிருந்து வருவதில்லையோ?”