பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 53

“உங்கள் பாடல் கொள்ளத் தகாதவை, உங்க ளுக்குக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல இவன் வாய் நடுங்குமோ? நாமாக இருந்தால் ஒரு கணத்தில் சொல்லி விடுவோமே!'

"அந்த வார்த்தைகளைச் சொல்லுவதற்கு இவன் கற்றுக் கொள்ளவில்லை. இவனுடைய வாய்க்கு அந்தத் தன்மை இல்லை. ஈயென்று இரப்பவர்க்கு ஈயக் கற்றுக்கொண்டான். இந்த இளையர்கள் பாடுவதைக் கேட்டு நாம் அவர் பாடல் கொள்ளாப் பாடல் என்று சொல்கிருேம். அரசன் காதில் அந்தப் பாடல் விழுகிறதோ, இல்லையோ, தெரியாது. ஆல்ை அவர் கள் வரிசையாகக் கை நீட்டுகிருர்களே, அந்த நேர்கை நிரை (வரிசை)யாக இருப்பதைக் கண்ட பிறகும் மன்னர் பிரானல் சும்மா இருக்க முடியுமா? ஈ என்று கேட்ப தற்கு முன்பே குறிப்பறிந்து கொடுக்கக் கற்றவன் இவன். ஈயென்று கேட்ட பிறகு மறுக்கக் கல்லாத வாக்கை உடையவன். இரப்பவருக்கு வேறு காரணங் கூறி, இல்லையென்று சொல்லக் கல்லாத இயல்பு இவன் வாய்க்குரிய தன்மை." -

"அவற்றை யெல்லாம் கல்லாத வாய்மையன் (வாயின் தன்மையைப் பெற்றவன்) இவன் என்பதை அறிய அறிய வியப்பாக இருக்கிறது.”

“எத்தனை வணக்கத்தோடு இனிய சொற்களைக் கூறிக் கொடுக்கிருன் பகைவர்முன் நிமிர்ந்து நிற்கும் இப் பெருமான், வலியவர்க் கெல்லாம் வலியவகை வன்மை படைத்த இக் குரிசில், வணங்கிய சாயலை