பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புது வெள்ளம் ”...

(மென்மையை) உடையவனுக இப்போது இருப்பது, கண்டாரும் நம்பமுடியாத வியப்பு அல்லவா?”

"ஆலுைம் பகைவர் முன் இவன் வணங்கா ஆண்மையை உடையவன்தான்.'

இப்படிப் புலவர்கள் தமக்கு உண்டான வியப் பினுல் ஒருவர்க்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; ஆண்டு நீர்ப் பெற்ற தாரம், ஈண்டு.இவர் கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன் என்று வியந்தார்கள். -

இப்படி அவனுடைய வணங்கிய சாயலை நினைத்த போது, அவனது வணங்கா ஆண்மையும் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றியும் பரணர் கேள்வி யுற்றிருக்கிருர். 3.

பல்பொறி மார்பு

மார்பிலே அழகிய மணமுள்ள மாலையை அணிவது மன்னர்களின் இயல்பு. சேரமானும் மாலையை அணிந் திருந்தான். கவின் பெற்ற மாலை அது. மாலை வாடுவது சிறப்பன்று. அதைத் தீய நிமித்தமென்று சொல்வதுண்டு. ஆனல் சேரமானுடைய மாலையில் உள்ள பூக்களின் இதழ்கள் வாடியதுண்டு. அந்த வாட்டம் அவனுடைய சிறப்ப்ையே எடுத்துக் காட்டியது. அவன் மார்பிலே பூசியிருந்த சந்தனம் உ ல ர் ந் து பொருக்குத் தட்டியது; அதுவும் அவனுடைய பெருமைக்கு அடையாளமாயிற்று. எப்பொழுது?