பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புது வெள்ளம்

அந்த ஆறுகளில் பேராறு என்பது சேரநாட்டு மலை யிலே தோன்றி மேல் கடலிலே விழுகிறது. அதன் தோற்றமும் சங்கமமும் சேரநாட்டுக்குள்ளே இருக் கின்றன. சேரனுடைய மலையிலே பிறந்து அவனு டைய கடலிலே சென்று கலக்கிறது அது.

பேராற்றில் புதுவெள்ளம் வரும்போது மக்க ளுக்கு மகிழ்ச்சியும் பெருக்கெடுத்துப் பொங்கும். புனல் மலிந்த வெள்ள நாட்களில் நீர்விழா அங்கங்கே நடை பெறும். புனலாட்டு நிகழும். ஆடவரும் மகளிரும் நீராடி மகிழ்வார்கள். மலிபுனல் கண்டு நிகழ்தரும் நீர்விழா விலே சேரநாட்டு மக்கள் ஒன்றுகூடி ஆடி விருந்துண்டு களி சிறந்து வாழ்வதைப் பரணர் கண்டார்.

வேனிற் காலத்தில் மக்கள் பொழில்களிலே புகுந்து தங்கி இன்ப விளையாட்டு அயர்வதையும் புலவர் பார்த்திருக்கிருர். புதுப் புனலில் விளையாடிய போது அந்தக் காட்சியின் சிறப்பு ஒரு விதமாகத் தோற்றியது. வெப்பம் மிக்க வேனிலில் பச்சைப் பசேலென்று தழைத்துப் பரவிய பூம்பொழிலிலே தங்கித் தென்றலின் இனிமையையும், மலரின் மணத்தையும் நுகரும்போது அந்தக் காட்சி ஒரு வகையில் சிறப்புடையதாக இருந்தது. எல்லாம் அழகிய காட்சிகள். அவர்களு டைய வாழ்க்கையே மிக்க அழகுடையது. நீர் விளை யாட்டில் அவர்கள் ப்லவண்ண நீர்களைக் குழாய்களைக் கொண்டு ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடினர்கள். பூம்பொழிலில் இன்பம் நுகர்ந்தபோது இன்னிசையை எழுப்பி அந்த இசை வெள்ளத்திலே மூழ்கித் திளைத்