பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புது வெள்ளம்

'துணங்கை ஆடிய வலம்படு சேரமான் ஆகிய ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் போர்க்களத்தில் இருக் கிருன். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்: என்று விறலியை நோக்கி நச்செள்ளையார் சொல்கிருர்,

★ "போர்க்களமா அங்கே நாம் போக முடியுமா?"

'நன்ருகப் போகலாம். வெற்றிக் களிப்புடன் துணங்கையாடிக் கொண்டிருக்கும் நிலையிலே சென்று பார்த்தால் சேரனுடைய வீரச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் நன்ருகஅறிந்து கொள்ளலாம்.'

'அவன் அரண்மனையில் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும்போது கண்டு களிக்கலாமே!"

"அப்படிக் காணுவதை எப்போது வேண்டு மானுலும் செய்யலாம். மற்றச் சமயங்களில் பகைவரைப் புறங்காணும் வீரத்தைப் பிறர் கூற நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். சேர மன்னனுடைய வாழ்வில், அடிக்கடி போர் நிகழ்வதில்லை. ஏனெனில் அவனை எதிர்க்கும் பைத்தியக்காரர்கள் உலகத்தில் அதிகமாக இல்லை. பல ஆண்டுகளாக அவன் வீரம் உலகம் புகழும் சிறப்புடையதாக விளங்குகிறது. ஆனாலும் யாருக்காவது போதாத காலம் வந்தால் குறும்பு செய்யத் தலைப்படுகிருர்கள். அப்போது சேரனுடைய திணவெடுத்த தோள்கள் பூரிக்கின்றன. பகைவர்களை அடியோடு கருவறுத்து விடுகிருன். அத்தகைய நிகழ்ச்சி மிக மிக அருமையாகவே நிகழும்.'