பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 69

மறவருடைய குருதி துளிப்பதல்ை சிவந்தன. மேகம் மழைத் தூவலைத் தூவியது போலப் போர்க்களத்தில் குருதித் தூவல் இருந்தது. -

எங்கே பார்த்தாலும் வெட்டுப்பட்ட உடம்புகள். அதற்குமுன் வீரரென்றும், மறவரென்றும் பெயர் சொல்லும்படி உயிருடனும் ஊக்கத்துடனும் உலவிய அவ்வுடல்கள் இப்போது உடல் என்று சொல்லவும் தகுதியின்றித் துண்டு துண்டாகி ஊன்குவையென்று சொல்லும்படி குவிந்தன. ஊன்குவையுள்ள இடத்தில் புலால் நாற்றம் வீசுவது இயல்புதானே? ஆகவே அங்கே குருதித் தூவலும் புலவு நாற்றமும் படர்ந்தன. அத்தகைய களத்திலே ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் இப்போது இருக்கிருன். முன்பு பெற்ற வெற்றிகளை அவன் மாலையும் கழலும் காட்ட, இப்போது பெற்ற வெற்றியை அவற்றிலே படிந்து செந்நிறம் ஊட்டிய குருதி காட்ட, அவன் வெற்றி மிடுக்கோடு விளங்கு கிருண்.

வெற்றியினுல் உண்டாகும் உவகைக்கு எல்லை உண்டோ? படை வீரர்கள் குதித்துக் கூத்தாடு கின்றனர். அந்தக் கூத்தில் சேரமானும் கலந்து கொள்கிருன் கைகளைக் கொட்டி ஆடும் ஆட்டத் துக்குத் துணங்கை என்று பெயர். போர்க்களத்தில் வெற்றிபெற்ற பெருமகிழ்ச்சியால் வீரரும் மன்னனும் துணங்கை யாடுகிருர்கள். துணங்கை ஆடுவதற்குக் காரணம் சேர மன்னன் பெற்ற வெற்றி; வலம் (வெற்றி) பட்டதால் (உண்டாகியதால்) துணங்கையாடிக் களிக்கும் நிலை வந்தது. .