பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புது வெள்ளம்

புறங்காட்டி ஒடக் கூடாது' என்ற விரதத்தையே தம் நெஞ்சிலே பூண்டவர்கள் பகைவர்கள். ஓடாப் பூட்கை (விரதம்)யை உடைய மறவர்கள் நிரம்பிய படை, பகைவர் படை. படை வீரர்களுடைய இயல்பே அதுவாளுல் படைத் தலைவர்களுடைய மனத் திண்மையைச் சொல்ல வேண்டுமா?

அத்தகைய மறவரின் வலிமை, போர்வீரம், மிடல் மற்றவர்களோடு பொரும்போது வெற்றியை உண்டாக்கும். ஆனல் அந்த மிடல் ஆடு கோட் பாட்டுச் சேரலாதனிடத்தில் பலிக்கவில்லை. அவன் அவர்களுடைய மிடலெல்லாம் அடியோடு கெடும்படி போர் செய்தான். -

பனைமாலையை அணிந்து வீரக்கழலைப் புனைந்து போர்க்களத்திலே புகுந்தான் அவன். கடுமையாகப் போர் நடந்தது. பிளிறி ஆரவாரித்து வரும் களிற்றை வேலாலே குத்தினர் சிலர். எதிர்த்த மறவரை வாளால் வெட்டினர் சிலர். அம்பினுலே பலர் உடலைத் துளைத் தனர். வேலாற் குத்தியபோது குத்திய புண்ணி லிருந்து குபீர் குபீர் என்று குருதி கொப்புளித்தது. வாளால் வெட்டியபோது சலார் சலார் என்று இரத்தத் துளி நெடுந்துாரம் தெறித்தது. சேர மன்ன னுடைய பெரிய பனை மாலையிலே அந்த இரத்தத் துளிகள் படிந்தன. அவனுடைய பெருமைக்கு அடை யாளமாகிய வீரக் கழலிலே இரத்தக் கறை படிந்தது. அதனால் கழல் சிவந்து தோன்றியது. அவனுடைய இரும்பனம் புடையலும் (பனந்தோட்டாற் செய்த மாலை), வான் கழலும் மிடில் அழிந்து உடல் துணிந்து வீழும்