பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 67

என்பவள் ஆடல் பாடலில் சிறந்தவள். விறல் என்பது பாவம். பாடும் பாட்டிலே வரும் பாவத்தைத் தன்னுடைய ஆடலால் வெளிப்படுத்துகிறவளாதலின் அவளுக்கு விறலி என்ற பெயர் வந்தது. பாணனுக்கு மனைவியாதலின் பாணிச்சி என்றும் பாடினி என்றும் விறலியைச் சொல்வதுண்டு. பாணன் யாழ் வாசித்துப் பாட அதற்கு ஏற்ப ஆடும் திறமையைப் பெற்றவள் விறலி.

ஒரு விறலியைப் பார்த்து, 'சேரமான் இத்தகை யவன்; அவனைப் போய்ப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற்று வருவோம்' என்று சொல்வது போல இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. சேர மன்னனிடம் செல்ல வழிகாட்டுவது ஆதலின் இது ஆற்றுப்படைப் பாட்டு; விறலிக்கு வழி காட்டுவதல்ை விறலி யாற்றுப்படை

ஆயிற்று.

போர்க்களத்திற்கு அருகில் பாடிவீட்டில் சேர மன்னன் தங்கியிருக்கிருன். அவனை எதிர்த்த பகை வர்கள் வலிமை மிக உடையவர்கள்; போர் செய்யப் புறப்படுகையில் முன்வைத்த காலைப் பின் வைப்ப தில்லை என்று சபதம் செய்து புறப்பட்டவர்கள்; புறங் காட்டி ஓடுவதைக் காட்டிலும் உயிர் விடுவதே சால நன்று என்ற விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அவர் களுடைய துணிவே அவர்களுக்குப் பூனைப்போல இருக்கிறது. நெஞ்சுக்கு அணியாக இருப்பது திண்மை. நெஞ்சம் திண்ணியராக இருப்பவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாறே பெறுவர். "நாம்