பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புது வெள்ளம்

தூங்கும் புலியை இடறிவிட்டதுபோ லாயிற்று இது. உடனே தன் படைகளுடன் தண்டகாரணியத்தை நோக்கிப் படையெடுத்தான்.

இதைத்தான் பகைவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள், தண்டகாரணியத்தி னிடையே சேர மன்னனை அவர்கள் எதிர்த்தார்கள். பகைவர் பலராக இருந் தாலும் சேரமானுடைய வீரத்துக்கு முன் அவர்கள் எம்மாத்திரம்? சேர மன்னன் அவர்களை வென்று தண்டகாரணியத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஆடு களைக் கைப்பற்றி மீண்டான். தொண்டியில் வேள்வி இனிதே நிறைவேறியது. அதை நிறைவேற்றிய அந்தணர்களுக்குப் பல ஆக்களையும் ஊரையும் அரசன் வழங்கின்ை.

சிறைப்பட்ட ஆடுகளை மீட்டும் கைக் கொள்வதற் காகப் பகைவருடன் போர் செய்து வென்றமையால் இந்தச் சேர மன்னனுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் வழங்கத் தொடங்கியது. ஆட்டைக் கொள்ளும் பெருமையை யுடைய சேர மன்னன் என்பது அந்தத் தொடரின் பொருள்.

பதிற்றுப்பத்தில் ஆரும் பத்தாக அமைந் திருக்கும் பத்துப் பாடல்களும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பற்றியவை. அவற்றைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற பெண் புலவர். அந்தப் பத்தில் ஏழாவது பாட்டு விறலி யாற்றுப்படை என்னும் துறையில் அமைந்திருக்கிறது. விறலி