பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 65

நிற்கலாம் என்று துணிந்தனர். அதற்கு என்ன வழி? பல நாட்கள் சிந்தித்தனர்.

தொண்டிமா நகரத்தில் மறையவர்கள் பெரிய வேள்வி ஒன்றை இயற்றுவதற்கு ஏற்பாடு செய் தார்கள். இந்தச் செய்தி பகைவர் காதுக்கு எட்டியது. அந்த வேள்வி நடைபெருமல் தடுத்தால் சேர மன்னன் சினம் மூண்டு பொர வருவான் என்ற எண்ணம் அவர் களுக்கு உண்டாயிற்று. யாக பசுக்களாகிய ஆடுகளை ஒருவரும் அறியாமல் அடித்துக் கொண்டு வந்து தண்டகாரணியமாகிய காட்டுக்குள் வைத்துவிட்டால், எப்படியாவது அவற்றை விடுவித்துக் கொண்டு செல்லச் சேரமான் முயற்சி செய்வான்; தண்டகாரணி யத்துக்கு அவன் படையுடன் வந்தால் அவனை மடக்கிக் கொள்ளலாம்' என்று ஒருவாறு முடிவு செய் தனர். நாய்கள் பல சேர்ந்து யானையை மடக்கத் திட்டம் போட்ட கதையாக முடியும் இது என்பதை அவர்கள் உணரவில்லை. .

வேள்விக்கு வேண்டியஏற்பாடுகள் தொண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதற்குரிய பண்டங் களையெல்லாம் தொகுத்தார்கள். ஒரு நாள் காலையில் எழுந்து பார்க்கும்போது யாகத்துக்காக வந்த மலையாடு களைக் காணவில்லை. இரவோடு இரவாக யாரோ திருடர்கள் அவற்றைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று தெரிந்தது. பகைவர்கள் அனுப்பிய ஏவலர் களே இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்றும், ஆடுகள் தண்டகாரணியத்தில் இருக்கின்றன என்றும் தெரிய வந்தது. சேரன் இதனை உணர்ந்தான்.

ւլ Qա-5