பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான்

சேரநாட்டு வளநகர்களில் சிறந்தது வஞ்சி, அதுவே அந்நாட்டின் தலைநகரம். அதனை யன்றி வேறு சிறந்த செல்வ வளம் உள்ள நகரங்கள் பல அந் நாட்டில் இருந்தன. மேல் கடற்கரையில் தொண்டி யென்ற நகரம் ஒன்று இருந்தது. அங்கே கப்பல் வியாபாரம் நன்கு நடைபெற்றது. வேதம் வல்ல நான்மறையாளர் பலர் அந் நகரில் வாழ்ந்து வந்தனர். 鱗

சேர மன்னனுடைய செல்வச் சிறப்பைக் கண்டு அவனுடைய பகைவர் பொருமை கொண்டனர். அவளுேடு பொருது தம்முடைய வீரத்தைப் புலப்படுத் துவதற்கு ஏற்ற துணிவு அவர்களுக்கு இல்லை. சேர நாட்டுக்குள்ளே புகுந்து வஞ்சிமா நகரை முற்றுகை யிடவோ, வேறு வகையில் சேர மன்னனை எதிர்க்கவோ அவர்கள் நடுங்கினர்கள். ஆயினும் எப்படியாவது அவனுடைய ஆற்றலைக் குலைக்க வேண்டுமென்ற ஆவல்மட்டும் அவர்களுக்கு அடங்கவே இல்லை.

நேர் நின்று போரிடும் நேர்மை அவர்களிடம் இல்லை. ஆகவே ஏதேனும் வஞ்சனை செய்து போர் மூட்டலாம் என்று பலர் கூடி ஆராய்ந்தனர். சேரனை அவன் நாட்டிலே சென்று போரிட்டு வெல்வது என்பது இந்திரலுைம் எண்ண இயலாத செயல். அவனைத் தம்முடைய நாட்டுக்கு வருவித்து எதிர்த்து