பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 புது வெள்ளம்

ஒ ஓ ஆட வேண்டுமென்று சொல்கிறீர்களோ போர்க்களத்தில் ஆடல் பாடல் பொருத்தமாகுமா?"

'இப்போது நாம் செல்லப் போவது போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் களம் அன்று; போர் முடிந்த களம்; மன்னன் வீரரோடு துணங்கையாடும் களம். அந்த ஆட்டம் நிகழும்போது உன் ஆடல் நிகழக் கூடாதா? அங்கே போய் நீ ஆட வேண்டு மென்று எனக்கு விருப்பமாக இரு க் கி ற து; செல்வோமா?' -

நாம் மாத்திரமா போவது?"

'இல்லை, இல்லை. உன்னுடைய ஆடலுக்கேற்பப் பாடும் பாணர்களையும் அழைத்துக் கொண்டுதான் போகவேண்டும். சேர மன்னனைக் கண்டு வரப் போகிருேம் என்று பாணரிடம் சொன்னல், நான் நீ என்று ஆயிரம் பேர் முந்துவார்கள்.' - "அங்கே போளுல் எவ்வகையான பாடல்களைப் பாடவேண்டும்?'

'தழிஞ்சித் துறைப் பாடல்களைப் பாடவேண்டும்." 'அந்தத் துறை எதைச் சொல்வது?"

“மன்னர் பிரானுடைய கருணையையும் தூய வீரத் தையும் புலப்படுத்தும் துறை அது. தன்னை எதிர்த்த மறவர்களைக் கொன்று குவிக்கும் பேராற்றல் உடை யவன் சேரர் பிரான். இந்த வீரம் சிறப்புடையது தான். இதைக் காட்டிலும் சிறப்பான வீரம் ஒன்று உண்டு. புறமுதுகிட்டவரையும் அஞ்சின வரையும்