பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 73

கொல்லாமல் விடும் வீரம் மிகமிகச் சிறந்தது. தோல்வி யுற்றுப் புறங்காட்டும் வீரர் முதுகிலே வேல் ஒச்சாத தறுகண்மையைப் பாடும் பாட்டே தழிஞ்சித்துறைப் பாட்டு. பகைவரை அழிக்கும் வீரத்தைக் காட்டிலும் புறங்காட்டினுேரைக் கொல்லாத வீரம் பெரிது. இல்லை யானுல் போரானது விலங்கினங்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு சாவது போன்ற தாகிவிடும். அறப்போர் என்று போரைச் சிறப்பிப்பது சான்ருேர் மரபு. தழிஞ்சித் துறையால் சொல்லப் பெறும் நிகழ்ச் சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் போரிடையே நிகழ் வதனால்தான் போர் அறத்தின் வழி நடப்பது என்று சொல்கிருர்கள். ஆதலின் அந்தத் தழிஞ்சியைப் பாட வேண்டும்.' -

"என்ன பண்ணிற் பாடலாம்?"

பாணர்களே அழைத்துச்சென்று பாலைப் பண்ணிலே தழிஞ்சிப் பாட்டைப் பாடச் சொல்ல வேண்டும். பாணர் கையில்தான் யாழ் இருக்கிறதே! அவர்கள் நரம்புகளை யெல்லாம் நன்ருகத் தொடுத்துக் கட்டியிருக்கிருர்கள். அவர்கள் எப்படி யெல்லாம் மனத்திலே நினைக்கிருர்களோ, அப்படியெல்லாம் அந்த நரம்புகள் பேசுகின்றன. அவர்கள் விருப்பப்படி பணிந்து நடக்கும் ஏவலரைப் போல அவை ஒலிக் கின்றன. நரம்புக் கட்டாகிய தொடை அவர்கள் ஏவலின்படி நடப்பதால் அதைப் பணிதொடை என்று சொல்லலாம்.'

"யாழ்நரம்புக் கட்டு நன்ருக அமைந்தாற் போதுமா?"