பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புது வெள்ளம் -

போதாதுதான். அதை வாசிக்கின்றவர்களுக்குக் கலைத்திறமை வேண்டும். பல காலம் பயின்ற பழக்கம் வேண்டும். அவர்களுடைய விரல் பல்காற் பயின்று பயின்று யாழில் இன்ப இசையை எழுப்பும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அந்த யாழோடு தம் குரலை இணைத்து இன்னிசையை எழுப்பித் தழிஞ்சி பாடினல் எத்தனை இனிமையாக இருக்கும் பாலைப் பண்ணுக்கு ஏற்றபடி சுருதி கூட்டி நரம்புகளை மீட்டிக் குரலோடு புணர்ந்த இன்னிசையாலே தழிஞ்சி பாடுவதற்கு ஏற்ற பெரிய யாழைப் பாணர் வைத்திருக்கின்றனர். அவர் களோடு போகலாம்.'

போர்க்களத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று சேரமான் கேட்கமாட்டாளு?'

'நம்மைப் போன்ற கலைஞர்களைப் பாதுகாப் பதையே முதற் கடமையாகக் கொண்டவன் அல்லவா அவன்? பரிசிலர்களைக் கண்டால் அன்புடன் வர வேற்று அளவளாவும் இயல்புடையவன். அவன் கலைஞர்களை வலிந்து வருவித்து அவர்களுக்கு விருந்து அருத்திப் பரிசில் வழங்கும் புகழைத் தமிழ் நாட்டார் . முழுவதும் அறிவார்களே. குடிமக்களைப் புரத்தலால் புரவலன் என்ற பெயர் மன்னனுக்கு அமைந்தது. சேர மன்னன் குடிமக்களைப் புரப்பதன்றி இரவலராகிய கலைஞர்களைப் புரப்பதைத் தானே விரும்பி ஏற்றுக்

கொள்பவன்.'

'அவன் வாழ்க! மனைவி மக்களுடன் நீடுழி வாழ்வானுக!'