பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 75.

'மனைவி மக்கள் வாழ்க என்று நீ வாழ்த்திய வுடன் எனக்கு ஒரு நினைவு வருகிறது. அவனுக்கு மனைவியும் மக்களும் இருக்கிருர்கள். எல்லாச் செல்வங் களையும் பெற்ற சேர மன்னன் மக்கட் செல்வத்தையும் பெற்றிருக்கிருன். இளம்புதல்வர்கள் வருங்காலத். துக்கு அருந்துணையல்லவா? இளந்துணைப் புதல்வராகிய நல்ல வளத்தைப் பயந்த மகளிர் அவனுடைய தேவிமார். சிலம்பணிந்த காலும் அடக்கத்தை அணிந்த நெஞ்ச மும் உடையவர்கள் அவர்கள். கற்பிலே சிறந்தவர்கள். அறிவு நிரம்பியவர்கள். அவர்களுடைய புகழை. நல்லிசைச் சான்ருேர்கள் சேரனுடைய புகழோடு சேர்த்து வைத்துப் பாடுவார்கள். அந்த இசை எங்கும் பரந்து தோன்றும். அவர்கள் நெற்றியிலே திருமகள் விலாசம் கொஞ்சி நடமிடும். ஒண்ணுதல் மகளிராகிய அவர்கள் சேரன் வாழ்விலே மங்கலம் பெருக வாழ். கிருர்கள். அந்த வாழ்வுக்கு நன்கலமாக, துணையாக, வளமாக இளம் புதல்வரைப் பயந்து சிறந்து விளங்கு கிருர்கள்.'

'கலைஞர்களைப் பாதுகாத்துக் குடிமக்களைக் காவல் செய்து வருவதல்ை அறம் நிரம்பியவன் என்று தெரி கின்றது. பகைவரை வென்று பொருள் பெறுதலால் பொருளாலே குறைவில்லாதவன் என்பதையும் உணர் கிறேன். மனைவிமாரும் மக்களும் நிரம்பினமையின் இன்பவாழ்விலும் ஏற்றம் பெற்றவ னென்று தெரிந்து

கொண்டேன்.'

- 'இன்பவாழ்வின் சிறப்பெல்லாம் மன்னன்பால் உண்டு. ஊடலும் கூடலுமாகிய காதல் வாழ்வு குடி