பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புது வெள்ளம்

یہ ہبسبب- مسببم*****محد’’

மக்களுக்கு மாத்திரமா? மன்னனும் அந்த வாழ்வில் இன்புறுகிருன்.'

ஊடலா?'

ஆம். ஊடல் இல்லாமல் இன்பவாழ்வு கருக் காயைப் போன்றதல்லவா? அரசனுடைய வாழ்க்கை யில் மகளிர் ஊடுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் நேரும். ஆயினும் அவர்களுடைய ஊடலை அவன் நீட்டிக்க விடமாட்டான். பகைவருக்கும் அஞ்சாத மன்னன் மகளிர் ஊடலால் கண் சிவந்து பார்க்கும் பார்வைக்கு அஞ்சுவான். அவர்களின் துனி (ஊடல்) யைக் கண்டு அஞ்சுவதை யன்றி வேறு அச்சத்தை அவன் அறியான்...... ஏன்? மற்ருென்றுக்கும் அஞ்சு வான். மகளிர் ஊடல் கண்டு அஞ்சுவதைக் காட்டிலும் மிகுதியாக அதற்கு அஞ்சுவான்." - "அது என்ன? மன்னனுடைய பெரும் புகழை யெல்லாம் சொல்லிவிட்டு இப்போது அவனுடைய

குறைகளைச் சொல்ல வருகிறீர்களோ?” - "குறை அன்று. மகளிர் துணித்த (ஊடிய) கண்ணக் கண்டு அஞ்சுவான் என்று சொன்னேன். அப்படிச் சொல்வது அவனுக்கு இழிவாகுமா? அவனுடைய இன்பவாழ்க்கையின் சிறப்பையல்லவா அது எடுத்துக் காட்டுகிறது? அதுபோல இந்த அச்சமும் அவனு டைய மாட்சியைத் தெரிவிப்பதே யாகும்.'

'அப்படி உயர்வு தரும் அச்சம் என்று எதைச் சொல்கிறீர்கள்?"

பகைவரை அஞ்சாமல் அவர் மிடல் தபும்படியாகச்

செய்யும் சேரமான், மகளிர் துணித்த கண்ணைக் கண்டு