பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் 77

அஞ்சுவதைக் காட்டிலும் இரவலருடைய துன்பத்தைக் கண்டால் மிக அஞ்சி நடுங்குவான். நம்மைப் போன்ற பரிசிலர்களின் வயிறு வாடாமல், முகம் வாடாமல், உள்ளம் வாடாமல் இருக்கச் செய்பவன் அவன். குழந் தையின் வாடிய முகம் கண்டால் தாய் எப்படி வருந்: துவாளோ, அப்படி இரவலர்களுடைய புன் கண்ணே (துன்பத்தை)க் கண்டு அஞ்சி வருந்துவான். அதனல் தான் நாம் அவனைச் சென்று கண்டு வரலாம் என்று. சொன்னேன். அத்தகைய வள்ளலை வேறு எங்கே காணப்போகிருேம்?'

"இரவலருக்கு ஏற்ற புரவலரிற் சிறந்தவன் அவ. னென்று உணர்ந்தேன். நம்மை எதிர்கொண்டு. புரக்கும் கோமானைக் கண்டு வருவதற்குத் தடை என்ன? உடனே புறப்பட வேண்டியதுதான்.' x

A.

விறலியை நோக்கிக் கூறுவதாக அமைந்திருக் கிறது பாட்டு.

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப - இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப குருதி பணிற்றும் புலவுக்களத் தோனே, துணங்கை ஆடிய வலம்படு கோமான்; 5. மெல்லிய வகுத்தில் சீறடி ஒதுங்கிச்

செல்லா மோதில், சில்வளை விறலி? பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பால் பண்ணிக் குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி, 10. இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த