பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரவலர் கோமான் ?Ꮽ

வரற்கு (15), செல்லாமோ? (6) என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.

1, பூட்கை - மேற்கொண்ட உறுதி. மிடல்-வலிமை. தப - கெட. 2. இரும் பணம் புடையல் - பெரிய பனக் தோட்டு மாலே. வான்கழல் - பெருமையையுடைய கழல். 3. பணிற்றும் - சிதறும்; துவும். புலவு - புலால் நாற்றம். 4. துணங்கை: பேய் ஆடும் துணங்கை யென்றும் வீரர் ஆடும் துணங்கை யென்றும் மகளிர் ஆடும் துணங்கை யென்றும் பலவகை உண்டு. இது வீரர் ஆடுவது. இரண்டு கைகளையும் விலாப் பக்கத்தில் முடக்கி யடிப்பது துணங் கைக் கூத்து என்பர். 'பழுப்புடை இருகை முடக்கி அடிக்கத் துடக்கிய நடையது துணங்கை யாகும்" என்பது இதன் இலக்கணம். வலம்படு-வெற்றி தோற்றிய படுதல்உண்டாதல். -

5. மெல்லிய-மென்மையான; மெத்தென்ற, வகுந்து - வழி. சீறடி - சிறு அடி, ஒதுங்கி - நடந்து. 6. செல்லாமோ. செல்வோமா. செல்லுவாமோ என்பதன் மரூஉ (ஐயர வர்கள்.) தில் விருப்பத்தைத் தெரிவிக்கும் இடைச்சொல். சில்வளே விறலி-சிலவாகிய வளைகளே அணிந்த விறலி, பல் வளையிடுவது பெதும்பைப் பருவத்ததாதலின், அ.தின்றிச் சில்வளேயிடும் பருவத்தாளென அவள் ஆடல் முதலிய துறைக்கு உரியளாதல் கூறியவாறு என்பது பழைய உரை.

7. பணி - பணியும்; ஏவல் செய்யும்; உள்ளம் நினைத்த படி விரல் மீட்டியவுடன் ஒலிக்கும். தொடை - நரம்புக் கட்டு. நரம்பு என்பது சுரத்துக்கும் பெயர். 8. விரல்கவர்விரலால் தடவி வாசிக்கப் பெறும். விரல் கவர் யாழ் என்ற * துணங்கை தூங்க' (56) என்று திருமுருகாற்றுப்படையில் வரும் பகுதிக்கு நச்சினுர்க்கினியர் எழுதிய உர்ையில் இந்தச் சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டுகிறர்,