பக்கம்:புதையலும் பேழையும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s புதையலும்

தோண்டப்படுவது. கிணற்றின் சுற்றுச் சுவர் கல்லால் கட்டப் படுவதோடு உறைகள் இறக்கப்படுவது. இதனை, உறைக் கிணறு என்பர். பட்டினப்பாலையும், -

"உறைக்கிணற்றுப் புறஞ்சேரிா-என்கின்றது.கேணி யோ இவ்வாறு உறையாக அன்றிக் கருங்கற்களால் ஆழத்தினின்று சுவர் எழுப்பப்படுவது. கிணற்று நீர் இறைக்கப்பட்டு நீர் ஊறி நிற்பது. இதனை, - -

'இறைத்தொறும் ஊறுங் கிணறு என்னும் படி மொழிப் பாடலும் அறிவிக்கும். கேணி நீர் இறைக்கப்படுவது என்பது மரபில்உள்ளதன்று. கிணற்று நீர்மேலேஉருளும் உருளை அமைக்கப்பட்டு இறைக்கப்பட்டே பயன்கொள்ளப்படுவது.

'எந்திரக் கிணறும் என மணிமேகலை நீர் இறைக்க உருளைஇடப்படுவதை எந்திரம்' எனக் குறித்துக் காட்டி யுள்ளது. கேணி அவ்வாறு உருளையிட்டு இறைக்கப்படுவதன்று. கிணறு குறுகலானது; கேணி அகலமானது. இதன் அகலம்,

வேட்டச் சீருர் அகன்கண் கேணி க் -எனப் பட்டது.

இக்கேணி பெரும் மாட்டுப் பண்ணை உள்ள முற்றங்களில் அமைக்கப்படுவது உண்டு. பட்டினப்பாலை,

'தண்கேணித் தகைமுற்றத்துப் . பகடு எருத்தின் பல சாலை' (51, 52.) என்றது. இங்குள்ள கேணியை.

"குளிர்ந்த சிறிய குளங்களை' என்று நச்சர் சிறிய குளமாக எழுதினார். நாற்கோணமாக அல்லது வட்டமாகக் கட்டப்பட்ட சிறிய குளமே கேணி, -

1 பட் : t8 2. பழ : 879, х - 8 மணி : சிறைக்கோட்டம் : t02. 4 தற் : 92 :