பக்கம்:புதையலும் பேழையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புதையலும்

அமைக்கப்பட்டன. இவை (பிற்கால அமைப்பு என்பதால் திருக் குறளில் குறிக்கப்படும் மணற்கேணியாகா.

எனவே மணற்கேணி என்னும் சொல்லும் இராமனாதபுர மாவட்டத்தை அடையாளங் காட்டும் சொல்லாகின்றது.

அடுத்து இராமனாதபுர மாவட்டத்தின் அடிப்படை மாடு கொண்டதாக உள்ள சொல் 'மாடு” என்னுஞ் சொல்.

இதற்குப் பக்கம், செல்வம்' என்னும் பொருள்கள் உள செல்வம்' என்னும் பொருள்கொண்டும் இங்கே காணலாம்.

சோழநாட்டார்தம் செல்வம் நெல் வயல்களைக் கொண்டு, அளவிடப்படுவது. சேர நாட்டார்தம் செல்வம் தென்னந் தோப்பு களைக் கொண்டு அளவிடப்படுவது. பாண்டியநாட்டார்தம் செல்வம் மாட்டு மந்தை. இத்தொடர்பில் செல்வம்’ என்னும்: பொருளில்,

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடு அல்ல மற்றை யவை”-என்னும் குறள் காணத் தக்கது. மாட்டு மந்தைகளையே செல்வமாகக் கொள்ளும் மரபு. இன்றும் இராமனாதபுரத்துப் பகுதிகளில் உள்ளது. இவ்வகையில் 'மாடு” என்னுஞ் சொல்லும் இம்மாவட்ட வாழ்வில் தோய்ந்த, சொல்லாகத் திருவள்ளுவரால் கையாளப்பட்டதாகக் கொள்ளலாம்.

g to அடுத்து உறக்கத்திலும் சான்று போன்று. உறக்கம். உறக்கம்’ என்னுஞ் சொல் உள்ளது. பிற பகுதியார் யாவரும் கண் அயர்தலைத் 'துரக்கம்’ என்னுஞ் சொல் லால் குறிக்கின்றனர். முகவை மாவட்டத்தாரும் அதனைச் சார்ந்த பகுதியினரும் இன்றும் உறக்கம் என்னுஞ் சொல்லையே. வாய்ப் போக்கிலும் கூறுகின்றனர். திருவள்ளுவர் தூக்கம்’ என்ற, சொல்லைக் காலம் நீட்டித்தல் என்னும் பொருளிலும், ! சோர்வு' என்னும் பொருளிலுமே கையாண்டுள்ளார். அவர்

1 'வெறுக்கை, மா, பொறி, சீர், விபவம், செல்வம்

விருத்தி, ஆக்கம், திரு. மாடு, இடம், வாழ்க்கை பெருக்கமும் செல்வப் பெயர்ென்ப் பேசுப'-சேந். தி : பண்புப்பெயர்:

2 குறள் : 400.

"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தாங்காது செய்யும் வினை -குற்ள் : 672.

4 “கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது.

தாக்கங் கடிந்து செயல்' - குறள் : 668,