பக்கம்:புதையலும் பேழையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

き *

பேழையும் 87

காலத்தில் தூக்கம் உறக்கத்தைக் குறிப்பதாக வழங்கப் படவில்லை.

'உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என 'உறக்கம்’ என்பதைக் கண் அயர்தலுக்காகப் பயன்படுத்தி யுள்ளமை காணலாம். இச்சொல்லும் ஒரு தனித்தன்மையுடன் முகவை மாவட்டத்தை அடையாளங் காட்டுகின்றது.

என்ன நோவா? நோப்பாளப் படுகின்றாயே!” - என் றெல்லாம் முகவை மாவட்டத்தார் இன்றும் உரையாடுகின்றனர்.

"நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று”

நோ -எனத் திருவள்ளுர் பேச்சில் "நோ நிற்பதைக் காண்

அவம், கின்றோம். பிற பகுதியாளர் "துன்பம் சீக்கு, கட்டம்,

என உரையாடுவதையும் இணைத்துக் காணுங்கால்

முகவை மாவட்டப் பகுதியில் திருவள்ளுவப் பெருந்தகையின் வாழ்வியல் சுவடு பதிந்திருப்பதை உணரலாம்.

"அவம்’ என்னுஞ் சொல் வீண், கேடு? என்பன போன்ற பொருள்களில் முகவை மாவட்டத்தார் வாயில் இயல்பாக வழங்கப் படுவதை,

"அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது".3 "அவம் செய்வார்'

-எனத் திருவள்ளுவர் கையாள்வதோடு இயைபுபடுத்திக் 5矿öf லாம்.

இவை போன்று மேலும் பல சொற்கள் முகவை மாவட்ட வழக்கிலுள்ளவை. திருக்குறளில் நின்று திருவள்ளுவருடன் அம் மாவட்டத்தை இணைத்துக் காட்டுகின்றன.

குறள் : 389 குறள் : 157, குறள் : 262. குறள் : 266,