பக்கம்:புதையலும் பேழையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கு முடிச்சவிழ்க்கும்சொல் போன்ற அணுகுமுறை பயன்படும்.

- இனிமைத் தமிழில் இறை வழிபாடு', சமயத் துறையினர் இன்றும் தீர்க்காத ஒரு சமுதாயப் பிரச்சினையைப் பேசுகிறது. வழிபாடு என்ற பரிமாணத்தையும் கடந்த ஒரு முக்கியத்துவத்தையும் இந்தக் கட்டுரையில் காட்டப்பட்டிருக்கும் மேற்கோள் களில் காணலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள், கவிஞர்கள், புலவர்கள் ஆகியோர் பலரும் பல சூழ் நிலைகளிலும் 'ஆரியமும், தமிழும் என்றே குறிப்பிட்டி ருக்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்தின் பண்பாடு, பாரம்பரியம், சமயம், தத்துவம்,இலக்கியம் ஆகியவற்றுக்கு இரு கண்கள் போன்று அமைந் தவை தமிழும், வடமொழியும். இந்த உண்மையின் அடிப்படையிலன்றி நாம் இந்தத் துணைக் கண்டத் தின் பண்டைய நிலையை முழுமையாக உணர முடியாது. ஐரோப்பிய நாகரிகத்திற்கு எப்படி இலத்தினும், கிரேக்க மொழியும் அடிப்படைகளோ, அஃதே போன்று, இந்திய நாகரிகத்திற்குத் தமிழும் வடமொழியும் அடிப்படைகள் ஆகும். இதுஎளிதில் உணரக்கூடிய உண்மை. ஏனோ இதில் தொடர்ந்து ஒரு மயக்க நிலை இருந்து வருகிறது. ஆய்வாளர் களும் இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியப் பெரு மக்களும் இதில் எதனாலோ அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. காட்டியவர்களும், சில உண்மை களைக் கண்டவர்களும் இப்பணியில் தொடர வில்லை. - . . . .

"தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே!