பக்கம்:புதையலும் பேழையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 புதையலும்

நபி : அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை. இரண்டு.

குதிரைகளையும் ஒர் ஆட்டையும் அடித்திருக்கலாம். இப்போது எத்துணை குதிரைகளை அடிக்கலாம் என்று நினைக்கிறீர்?

வத் : குதிரைகள் இல்லை. பத்து ஆடுகளை அடிக்க

எண்ணினேன். -

நபி : வேண்டா, பத்து ஆடுகளுக்கு ஒப்பாக ஒரு ஒட்டகத்தை அடித்து விருத்து செய்க! சென்று வருக!

நபி பெருமான் இறைச்சி உணவை நீக்க முடியாத சூழலை உணர்ந்தவர். ஆயினும், அவரது உள்ளுணர்வு உயிர்க்கொலை யில் ஊன்றவில்லை. ஆனாலும், சூழலுக்கேற்பவே நெறிப்படுத்த ஏண்ணிக்கொலைவிழும் உயிரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பாங்கைக் கண்கிறோம்.

சாத்தனார் எளிமை.

சாதுவன் என்ற வணிகன் நாகர் இனத்தான் ஒருவனுக்கு அறவுரை புகலும் நிலை வந்தது. நாகர்களில் ஒர் இனம் நாகரீகமற்ற காட்டுப்போக்கு கொண்டது. மாந்தர் உடலையே தின்னுபவர்கள். அவர்கள்பால் சிக்கிக்கொண்ட சாதுவன் தனது திறனால் நாகரை நெறிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டான்.

அம்மணமாக - எலும்பு மேட்டின்மேல் - அதேநிலையில் ஒருத்தியை அனைத்தவாறு - கையில் கள் கலயத்துடனும் பச்சை இறைச்சியுடனும் அமர்ந்திருக்கும் நாகர் தலைவன்:

கள்ளையும் இறைச்சியையும் கைவிடச் சொல் கின்றாய். இவற்றை விட்டால் நாங்கள் வாழ முடியாது. ஆனாலும், நீ கூறும் அறிவுரையைக் கடைப்பிடிக்கவே விரும்புகின்றேன். எனவே, எமது பழக்க வழக்கத்திற்குப் பொருந்துமாறு சில நெறி களைச் சொல்! . . .