பக்கம்:புதையலும் பேழையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 107

சாதுவன் : உன் மண்ம்ர்ற்றத்தை நல்லத்ாகவே கொள்கின்றேன். உனக்குத் தக்கவற்றைச் சொல்கின்றேன். இறைச்சி உணவைக் கொள்ளும் நீ, ம்ாந்தர் உடல் இறைச்சியை நீக்கிவிடு. எவரேனும் கலம் உடைந்து உன்னிடம் சிக்கினால் அவரைக் கொல்லாமல் காப்பாற்று! விலங்குகளின் இறைச்சி உணவைக் கொள்க! அவ்விலங்குகளிலும் முதிர்ந்து கிழமாதி - விலங்குகளையே அடித்து உண்க! .

நா. த. நல்லது. இங்கே எம்மால் கடைப்பிடிக்கக் கூடிய வற்றையே சொன்னாய்; நன்றி. .

மணிமேகலைக் காப்பியத்தில் ஆசிரியர் சாத்தனார் இவ்வாறு நெறிப்படுத்தும் பாங்கை அமைத்துள்ளார். கொல்ை தீமையாயினும் அதனிலும் ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்துவது சான்றோர்தம் இயல்பு. இதனைப் பெருஞ்சான்றோர் பால் காண்கின்றோம். .

மாற்று வழி எளிமை.

எவ்வாறாயினும் நல்லறங்கள் செயற்பட விரும்பிய பெரியோர் எளியதாகக் கூறுதல், விட்டுக்கொடுத்துக் கூறுதல் என்னும் இனிய பாங்குகளைக் கையாண்டனர். அவற்றுள்ளும் நூற்றுக்கு நூறு எளிதிலும் எளிதாக நிறைவுற்றுத் திகழ்வது திருக்குறள் என்னலாம். விட்டுக் கொடுத்தல், கடுமையைக் குறைக் கும். மாற்று வழி சொல்லல் ஒருமுறை. இது சிக்கலை அவிழ்க்கும். ஒவ்வொரு கடுமைக்கும் ஒவ்வொரு மாற்று வழி வெவ்வேறிடங் களில் திருக்குறளில் வைக்கப்பட்டுள்ளது.

'இல்லைஎன்று ஒருவன் கேட்டால்,தான் இல்லாதவன் என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். எப்படி? இருந்தால் தானே கொடுப்பதற்கு' என்று கேட்கத் தோன்றும். -

'ஒப்புரவு செய்வது சிறந்தது. அதனால் கேடு வராது; வரும் என்றாலும் அக்கேட்டைத் தன்னை

TPā 09ఖిశేఖి ఎ టి ?

திறம் ஒழிக்'-னிெ: 18 117, 118