பக்கம்:புதையலும் பேழையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 181

நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்' -

-சிலம்பு : 3 : 31

"சுடர் வெண் நிலவின் தொழிற்பயன் கொண்ட

மிசைநீள் முற்றம்' -பெருங் , 1 : 33

  • பங்கயச் செங்கண் எம்மான்

பால் நிலாப் பயன் கொண்டு -பாகவதம்.

இவ்வாறு பல இலக்கியங்களும் நிலவில் புணரும் புணர்ச்சியை நிலவுப் பயன் கொள்ளல் என்று பெருமையாகப் பேசுகின்றன.

தற்கால நாகரீகப் பாங்கிலும் திருமணம் நிறைவேறியபின் செல்வவளம் மிக்கோர் மேற்கொள்ளும் காதல் இன்பப் பயணம் தேன் நிலவு எனக் குறிக்கப்படுவதைக் காண்கின்றோம். இஃதும் நிலவுப் பயன் கொள்ள வின் நிழல் எனலாம்.

நிலவுப் பயன் கொள்ளும் நிலா முற்றங்கள் எழுநிலை மாடத்தில் முன்புறத்திலும் பின்புறத்திலும் நீட்டி அமைக்கப் பட்டிருந்தன.

எழுநிலை மாடத்தை 'இன்ப வளமனை எனலாம்.

இனி, இந்த இன்ப வளமனை எவ்வாறு பருவங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது என்பதைக் காணலாம்.

கண்ணகியும் கோவலனும் திருமணம் முடிந்த பின்னர் எழு நிலை மாடத்தில் அமர்ந்து கூடிஇன்பமாகக் காலங்கழித்தனர்.

மாதவியினது மாளிகையிலும் எழு நிலை மாடம் இருந்தது. கோவலனும் மாதவியும் அதிற் கூடி இன்ப வாழ்விலேயே திளைத் தனர். இஃதே போன்று சீவகன் காந்தருவதத்தையுடனும் உதயணன் வாசவதத்தையுடனும் எழுநிலை மாடத்தில் கூடி இருந்ததாக அவ்வவ் இலக்கியங்கள் வண்ணிக்கின்றன.

கோவலன் மாதவியுடன் ஊடல்கொண்டு பிரிந்ததும் மாதவி தனித்துத் துயரம் அடைந்து,

"நெடுநிலை மாடத்து இடைநிலத்து ஆங்கோர் படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்த

1. சிலம்பு : 18 : 69.