பக்கம்:புதையலும் பேழையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 புதையலும்

ஒவ்வொன்றும் சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு, அன்னத்துவி ஆகியவை தனித் தனியே அடைக்கப்பட்டது. மெல்லிய வெண்மை நிறத் துணி விரிப்பின்மேல் முல்லை இதழ்கள் பக்குவமாகத் தூவப் பட்டுள்ளன. இது 'பூவணைப் பள்ளி' எனப்படும்.

கட்டிலின் மேற்கட்டில் தீட்டப்பட்டுள்ள ஒவியம் உரோகிணி என்னும் விண்மீனை முழுமதி அணையும் எழில் கொண்டது. மேற்கட்டியினின்றும் மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டும் வளை வாக அமைக்கப்பட்டுக் கவினோடு கம்மென்று மணக்கின்றன. இக் கட்டிலையே ஒருநாள் முழுதும் பார்த்துச் சுவைக்கலாம். படுத்துப் பார்த்தால் எழ மனம் வராது.

இவ்வறைக்கு அமைப்பான ஒளியைப் பாவை விளக்கு வழங் கிக்கொண்டுள்ளது. இவ்விளக்கம் யவனர் செய்தது; கலைத் தொழில் நிரம்பியது; மாட்சிமைப்பட்டது விளக்கும் கண்களை ஈர்த்து உள்ளத்தைக் கவர்கின்றது.

வடக்குப் புறத்தில் நீராடும் முற்றம் உள்ளது. அதில் அருவிபோன்று நீர்ஊற்று பனிநீரைச் சிதறுகிறது. அம்முற்றத் தில் ஒரு பெரிய தடா உள்ளது. அதில் நீராடுவதற்காக 32 ஒமா லிகை ஊறி, இளவெயிலில் இளஞ்சூடு ஏறிய மண நீர் நிறைந் துள்ளது. பக்கத்தில் அமைந்த புரையில் கதுப்பிலே தடவிக் கொள்ளுவதற்குரிய தைலம் நிறைந்த குப்பி உள்ளது. தேய்த்து நீராட நெல்லி அரைத்த சாந்து உள்ளது.

அடுத்துள்ளது ஒப்பனை அறை. நீராடியதும் மகளிர் கூந்தலையும் ஆடவர் குஞ்சியையும் உலர்த்த, சந்தன நெருப்பில் அகிற்புகையை ஆவிபோல் வெளியிடும் வெண்கலத் தாழிஉள்ளது. கூந்தலுள்ளே விரலாலே நீவிப் பூசிக்கொள்ள வார்த்த புழுகு, ஆண்கள் தூவிக்கொள்ளக் கருப்பூரப்பொடி உள்ளன. மணச் சுண் ணங்கள் உள்ளன.

பூத்தொழில் செய்யப்பட்ட பலவகை உடைகள் உள்ளன. மெல்லிய பட்டுடைகள்; பஞ்சாடைகள்; சிலந்தி நூல்போலும் வெண்பட்டு நூலால் ஆன மேலாடைகள் பேழைகளில் உள்ளன. குளிர்ச்சிக்குப் புகழ்பெற்ற கொற்கை முத்து மாலைகளும், அணி

1 'யவனர் இயற்றிய வினைமாண் பா வை' நெடு, வா 110,