பக்கம்:புதையலும் பேழையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி,

வானமும் கடலும் ஆடிய விளையாடல்.

சங்க இலக்கியங்கள் தன்மைநவிற்சிப் பேழை கள். பின் விளைந்தவை உயர்வுநவிற்சி விளை நிலங்கள். -

வெண்முகில் கடல் நீரைக் குடித்துக்

கருககொள்ளும்’ -

-என்னும் கருத்தை இருவகை இலக்கியங்களும் பேசுகின்றன. இது தன்மை நவிற்சியா? உயர்வு நவிற்சியா? இவ்வகை ஐயம் எழுதல் இயல்பு.

தி. ஆ. 1993-கி. பி. 1966-இல் மலைநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு கலத்தில் சென்ற போது வானமும் கடலும் ஆடிய விளையாட்டில் ஐயம் நீங்கியது. முகில் கடல்நீரை முகப்பதைக் கண்ணாரக் கண்டேன். அக்காட்சியின் எழுத்துப் படிவமாக எழுந்த கட்டுரை,

"கடல் நடுவே காரானை'

வெளியீடு : "தமிழ்ப் பொழில்’ 2005-தை மலர் (சனவரி - 1974)